டெல்லி கொரோனா மருத்துவமனையின் வார்டுகளுக்கு, சீனாவுடனான மோதலில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பெயர்கள் சூட்டல்!!

டெல்லி : டெல்லியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவனையில் உள்ள வார்டுகளுக்கு எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த 20 வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    

*டெல்லியில் கொரோனா நோயாளிக்களுக்காக சிறப்பு மருத்துவமனை அமைக்க உத்தரவிடப்பட்டது. இதை கையில் எடுத்த டி.ஆர்.டி.ஓ. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே மருத்துவமனை அமைக்கும் பணியை தொடங்கியது.

*போர்க்கால அடிப்படையில் மிக வேகமாக நடந்த பணியில், ஆயிரம் படுக்கைகள், அவசர சிகிச்சை அளிக்க 250  ஐ.சி.யூ படுக்கை வசதிகளுடன் புதிய மருத்துவமனையை அமைத்தது.

*டாடா சன்ஸ் நிறுவனம், இணைந்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மருத்துவமனையை 12 நாட்களுக்குள் அமைத்துள்ளன.

*இந்த மருத்துவமனைக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனை என பெயரிடப்பட்டுள்ளது.

*இந்நிலையில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த 20 வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக அவர்களின் பெயர்கள், டெல்லி சிறப்பு மருத்துவமனையில் வார்டுகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.

*ஐசியூ மற்றும் வெண்டிலேட்டர் வார்டுக்கு கல்வான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

*இதேபோல் கல்வானில் உயிரிழந்த தமிழக வீரர் பழனி உள்ளிட்ட 20 வீரர்களின் பெயர்களும், ஒவ்வொரு வார்டுக்கும் சூட்டப்பட்டுள்ளன.

*இங்கு கொரோனா சிகிச்சை முழுமையாக இலவசமாக வழங்கப்படும் என DRDO தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.இ

*இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 600 பேர் பணியில் ஈடுபட உள்ளதாகவும், வரும் நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து இது மாறுபடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: