சாலை வரியில் 6 மாத காலம் விலக்களிக்க வேண்டும்!: தமிழக அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை!!!

சென்னை: கொரோனா ஊரடங்கால் தொழில் நலிவடைந்துள்ளதால் 6 மாதங்களுக்கு சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. சாலையில் இயக்காத பேருந்துகளுக்கு சாலை வரியை கட்டச்சொல்வது சட்ட விரோதம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், 100 சதவீதம் அபராத கட்டணத்துடன் சேர்த்து சாலை வரியை கட்டச் சொல்வது வேதனை அளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அங்குள்ளவர் தெரிவித்ததாவது, ஜூலை 6ம் தேதி வரை ஆம்னி பேருந்து சாலை வரி சம்பந்தமாக எந்த அபராதமும், நடவடிக்கையும் எடுக்கக்கூடாது நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் அரசு அதையும் மீறி, கடந்த 3ம் தேதியிலிருந்து ஒரு ஆம்னி பேருந்துக்கு சாலை வரி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டு மேலும் 100 சதவீத அபராதமாக 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் என ஆன்லைனில் காண்பிக்கப்படுகிறது.

சாலையில் பேருந்துகள் இயக்காத போது சாலை வரியை கட்டச்சொல்வது சட்டவிரோதம் என தெரிவித்தனர். மேலும், பேரூந்துகளுக்கான இன்சூரன்ஸ் ஏப்ரல் முதல் 6 மாதங்களுக்கு விலக்க வேண்டும்  வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு 6 மாத காலம் செலுத்த வேண்டிய தவணை தொகையில் வட்டியை தள்ளுபடி, டோல்கட்டில் 6 மாத காலம் வசூலிக்காமல் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: