கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்வது ? : கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள 10 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை!!

சென்னை : கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. தலைநகர் சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தல் கொரோனா பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல பலி எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை,மதுரை உள்ளிட்ட 10 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மதுரை, நெல்லை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர்,தூத்துக்குடி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். எஞ்சிய மாவட்ட ஆட்சியர்களுடன் நாளையும் நாளை மறுநாளும் ஆலோசனை நடைபெற உள்ளது.

Related Stories: