இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது..: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால்  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,248 பேர் புதிதாக  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 19,693 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 425  உயிரிழந்துள்ளனர். இதுவரை 42,44,33 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15,350 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஐ.சி.எம்.ஆர் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 14 நாட்களில், சராசரி சோதனைகள் 2.15 லட்சமாக உள்ளன (2,15,655) கடந்த ஐந்து நாட்களில் முறையே 10 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, என்று தெரிவித்துள்ளார். மேலும், சோதனைத் திறனை அதிகரிக்கும் முயற்சியாக, பொது (788) மற்றும் தனியார் துறை (317) ஆகிய இரண்டிலும் சுமார் 1,105 கொரோனா சோதனை ஆய்வகங்களுக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஆர்டி-பி.சி.ஆர் ஆய்வகங்கள் (592); ட்ரூநாட் லேப்ஸ் (421) மற்றும் சிபிஎன்ஏடி லேப்ஸ் (92) ஆகும் என கூறியுள்ளார்.

Related Stories: