×

கொரோனா நோயாளிகளை ஒதுக்கக் கூடாது..மதுரையில் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக்கு பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி..!!

மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; கொரோனா நோயாளிகளை ஒதுக்கக் கூடாது. பாதிப்பு பகுதிகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுரையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி அளித்தார்.

மேலும், மதுரையிலும் கிராம பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்துதல் முகாம்களில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும். கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இதையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் ராதாகிருஷ்னன் ஆய்வு செயதார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் நடைபெறும். இந்த மருத்துவமனை அமைவது மிகப்பெரிய மைல்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,085 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Coroners ,Corona , Coronation of coronary patients should not be excluded.
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...