×

கேரட் விலை வீழ்ச்சியால் மாற்று பயிர்களுக்கு மாறிய விவசாயிகள்

குன்னூர்: கேரட் விலை வீழ்ச்சியால் மாற்று பயிர்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக  கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளைபூண்டு போன்றவற்றை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.  இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட்  சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமின்றி வெளி மாநிலங்களான பெங்களூர், கேரளா போன்ற பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கேரவ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், வெள்ளை பூண்டு, பீன்ஸ், டர்னீப், முள்ளங்கி, பீட்ரூட் போன்றவற்றை தற்போது அதிகமாக பயிரிட்டுள்ளனர். இவற்றிற்கும் மார்க்கெட் பகுதியில் விலை கிடைப்பதால் அவற்றை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Carrots, falling prices, alternative crops, farmers
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...