×

மகாராஷ்டிராவில் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.97 லட்சமாக உயர்வு: இதுவரை 19,693 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால்  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,248 பேர் புதிதாக  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 19,693 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 425  உயிரிழந்துள்ளனர். இதுவரை 42,44,33 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15,350 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,06,619 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8822 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,11,740 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,11,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ,62,778 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 99,444 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3067 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 71,339 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 11,388 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 7125 பேர் குணமடைந்தது.
பீகாரில் 11,876 பேருக்கு பாதிப்பு; 95 பேர் பலி; 8,765 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 466 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 395 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 3,207 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 2,601 பேர் குணமடைந்தது.

கோவாவில் 1,761 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 936 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 36,037 பேருக்கு பாதிப்பு; 1,943 பேர் பலி; 25,892 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 17,005 பேருக்கு பாதிப்பு; 265 பேர் பலி; 12,944 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1,568 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1,202 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 5,429 பேருக்கு பாதிப்பு; 25 பேர் பலி; 3174 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 20,164 பேருக்கு பாதிப்பு; 456 பேர் பலி; 15,928 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 2,781 பேருக்கு பாதிப்பு; 19 பேர் பலி; 2045 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 1005 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 826 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1,366 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 688 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 62 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 186 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 130 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 590 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 231 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 9070 பேருக்கு பாதிப்பு; 36 பேர் பலி; 6,224 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 802 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 331 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 6,283 பேருக்கு பாதிப்பு; 164 பேர் பலி; 4,408 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 3124 பேருக்கு பாதிப்பு; 42 பேர் பலி; 2,524 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 23,474 பேருக்கு பாதிப்பு; 372 பேர் பலி; 9847 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 8429 பேருக்கு பாதிப்பு; 132 பேர் பலி; 5255 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 23,902 பேருக்கு பாதிப்பு; 295 பேர் பலி; 12,703 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 22,126 பேருக்கு பாதிப்பு; 757 பேர் பலி; 14,711 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 27,707 பேருக்கு பாதிப்பு; 785 பேர் பலி; 18,761 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 18,697 பேருக்கு பாதிப்பு; 232 பேர் பலி; 8422 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 269 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 78 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 14,930 பேருக்கு பாதிப்பு; 608 பேர் பலி; 11,411 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 1063 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 737 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 125 பேருக்கு பாதிப்பு; 72 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
தாதர் நகர் ஹவேலியில் 271 பேருக்கு பாதிப்பு; 106 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 123 பேருக்கு பாதிப்பு; 61 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.



Tags : India ,Maharashtra , Damage in Maharashtra exceeds 2 lakh; Coronavirus death toll rises to 6.97 lakh in India
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!