அமெரிக்கா, குவைத், துபாயில் சிக்கி தவித்த 627 இந்தியர்கள் சென்னை வந்தனர்: 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

சென்னை: அமெரிக்கா, கிர்கிஸ்தான், குவைத், துபாய் ஆகிய நாடுகளில் சிக்கித்தவித்து கொண்டிருந்த 627 இந்தியர்கள் 4 சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து 129 இந்தியர்களுடன் ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் ஆண்கள் 57, பெண்கள் 64, சிறுவர்கள் 8. இலவச தங்குமிடங்களான விஐடிக்கு 9 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டலுக்கு 116 பேரும், வயதானவர்கள், நோயாளிகள் 4 பேர் சிறப்பு அனுமதியின் பேரில் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். கிர்கிஸ்தானிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் 164 இந்தியர்களுடன்  நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு சென்னை வந்தது. அவர்களில் ஆண்கள் 115, பெண்கள் 49. இலவச தங்குமிடமான விஐடிக்கு 99 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடமான ஓட்டலுக்கு 65 பேரும் அனுப்பப்பட்டனர்.

துபாயிலிருந்து ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் 181 இந்தியர்களுடன்  நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் ஆண்கள் 144, பெண்கள் 27, சிறுவர்கள் 10. இவர்களில் 115 பேர் இலவச தங்குமிடங்களான விஐடிக்கும், 66 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர். சிறப்பு விமானத்தில் வந்த இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதுபோல, குவைத்திலிருந்து தனியார் சிறப்பு மீட்பு விமானம் 153 இந்தியர்களுடன் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தது. அவர்களுக்கு விமான நிலையத்தில் இலவச மருத்துவ பரிசோதனைகள், இலவச தங்குமிடங்களான வசதிகள் கிடையாது. இதையடுத்து 153 பேரும் சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கு 14 நாட்கள் தனிமைக்காக அனுப்பப்பட்டனர்.

Related Stories: