×

ஆம்பூர் அருகே கொரோனா பாதித்தவர் வளர்த்த 2 நாய் பலி: கால்நடை துறையினர் விசாரணை

ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த மின்னூரைச் சேர்ந்த டிரைவர் கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் தனியார் மருத்துவமனையில் மருந்து வாங்க சென்று வீடு திரும்பினார். இதையடுத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது. மேலும், அவரது குடும்பத்தினர் 9 பேர் பாதிக்கப்பட்டனர். அனைவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் சோலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று தனிமைப்படுத்தபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் டிரைவர் வீட்டில் வளர்த்து வந்த ஒரு நாயும், நேற்று ஒரு நாயும் இறந்தது. நோய் தொற்றால் இறந்திருக்கலாம் என கருதி பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தகவலறிந்த கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் வந்து இறந்த நாயிலிருந்து மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags : victim ,Corona ,investigation ,Ambur: Animal Husbandry ,Ambur , Ambur, Corona victim, 2 dog kills, veterinary department, investigation
× RELATED உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய...