சென்னைஉட்பட 4 மாவட்டங்களில் சிறிய கோயில்கள் இன்று முதல் திறப்பு

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கு குறைவான வருவாய் வரும் வழிபாட்டு தலங்களை இன்று முதல் திறக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த 4 மாவட்டங்களில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதியில்லை. ஆடி மாதம் பிறக்கவுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர் உட்பட 4 மாவட்டங்களில் உள்ள சிறிய அம்மன் கோயில்களில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் களைகட்டும். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், கொரோனா வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் இந்தாண்டு ஆடித்திருவிழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: