முழு ஊரடங்கை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.171 கோடிக்கு மதுவிற்பனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 6ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஜூலை 31ம் தேதி வரையில் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதேபோல், ஜூலை 31ம் தேதி வரையில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. நேற்று முன்தினம் (4ம் தேதி) டாஸ்மாக் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்மதுவகைகளை அள்ளிச்சென்றனர். சென்னை நீங்கலாக பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளும் நேற்று மூடப்பட்டன. இதனால், நேற்று முன்தினம் ரூ.100 கோடிக்கும் மேல் மதுவிற்பனை ஆகும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று முன் தினம் ரூ.171.2 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் ரூ.20.2 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் 38.3 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் 40.5 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 37.4 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 34.8 கோடிக்கும் என மொத்தம் ரூ.171.2 கோடிக்கும் மதுவிற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: