சில்லி பாயின்ட்...

* இலங்கை அணி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் (25 வயது) கொழும்பு புறநகர் பகுதியில் நேற்று காரை ஓட்டிச் சென்றபோது சாலையோரமாக நடந்து சென்ற 74 வயது முதியவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குசால் மெண்டிசை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, அவரது பெயரில் உள்ள விளையாட்டு நிறுவனத்தின் இயக்குனராகவும், கார்னர்ஸ்டோன் வென்ச்சர் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளது லோதா கமிட்டி பரிந்துரைப்படி இரட்டை ஆதாயம் பெறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. எனினும், தனிப்பட்ட வியாபார தொடர்புகளுக்கு இந்த குற்றச்சாட்டு பொருந்தாது என பிசிசிஐ தரப்பில் கோஹ்லிக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சச்சின் 100 சர்வதேச சதங்கள் விளாசி படைத்த சாதனையை (டெஸ்டில் 51, ஒருநாள் போட்டியில் 49) கோஹ்லியால் நிச்சயம் முறியடிக்க முடியும் என்று ஆஸி. முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோஹ்லி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 27 சதம், ஒருநாள் போட்டிகளில் 43 சதம் என மொத்தம் 70 சர்வதேச சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* சச்சின் டெண்டுல்கரை ஆட்டமிழக்கச் செய்வதற்கு வியூகம் வகுப்பதற்காக நாங்கள் எத்தனை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினோம் என்பதற்கு கணக்கே இல்லை என்று இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறியுள்ளார்.

Related Stories: