மீறினால் 2 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம் கேரளாவில் ஓராண்டுக்கு மாஸ்க் கட்டாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், மாஸ்க் அணிதல் கட்டாயம், எச்சில் துப்பக் கூடாது என்ற விதிமுறைகளை கேரள அரசு ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக தொற்றுநோய் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. புதிய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளதாவது: பொது இடம், பணியிடம், வாகனங்களில் செல்வோர் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். போராட்டம், தர்ணா, பேரணி ஆகியவைகளுக்கு முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்தாலும், 10 பேருக்கு மேல் கூடக் கூடாது. சாலை, நடைபாதை உள்ளிட்ட பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும். இதை மீறினால் அதிகபட்சம் 2 ஆண்டு சிறை, ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என கேரள அரசு எச்சரித்துள்ளது.

Related Stories: