என்எல்சி அனல்மின் நிலைய பாய்லர் வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்வு

நெய்வேலி: என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிரந்தர தொழிலாளி ரவிச்சந்திரன் உயிரிழந்ததையெடுத்து பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.  இவர்களில் 6 பேர் உயிரிழந்தனர்.

17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பாய்லர் வெடித்து 7 பேர் பலியான சம்பவத்தில் முதன்மை பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் என என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த என்.எல்.சி. நிரந்தர தொழிலாளி சிவக்குமார் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இதனை அடுத்து மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிரந்தர தொழிலாளி ரவிச்சந்திரன் உயிரிழந்ததையெடுத்து பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரது குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிதது குறிப்பிடத்தக்கது.

Related Stories: