திருப்பத்தூர் பகுதியில் பலத்த மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது: ஊரடங்கால் பொதுமக்கள் செல்ல தயக்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் தண்ணீர் கொட்ட துவங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் தயக்கம் காட்டி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாக ஏலகிரி மலை,  ஆண்டியப்பனூர் அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. தற்போது திருப்பத்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதில் திருப்பத்தூர் பகுதியில் 34.1. மில்லி மீட்டர் மழையும்,  ஆலங்காயத்தில் 32 மிமீ, ஆம்பூரில் 12.5 மி.மீ, நாட்றம்பள்ளி ஜோலார்பேட்டை பகுதியில் 17.4 மி.மீ. வாணியம்பாடியில் 30.4 மி.மீ, மழையும் பதிவானது.

திருப்பத்தூர் பகுதியில் அதிக அளவில் மழை பெய்த காரணத்தினால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அந்த பகுதியில் கொரோனா பரவி உள்ள காரணத்தினால், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் குளிக்க யாரும் செல்ல முடியவில்லை. இதனால் நீர்வீழ்ச்சி பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.மேலும் அங்கு வெளியேறும் தண்ணீர் வீணாக செல்கிறது. அந்த பகுதியில் ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெரிவிக்கின்றனர்.

Related Stories: