சுரண்டை அருகே சீவலசமுத்திரத்தில் பழங்கால கற்சிலை கண்டெடுப்பு

சுரண்டை: தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் தாலுகா சுரண்டை அடுத்துள்ள மருக்கலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சீவலசமுத்திரம் கிராமத்தில் 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. நேற்று அங்குள்ள குளத்து கரையோரம் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் இரண்டு அடி ஆழம் தோண்டிய போது புத்தரின் முக அமைப்பு கொண்ட நூற்றாண்டை கடந்த கற்சிலையின் தலை மட்டும் கிடைத்துள்ளது. அந்த சிலை முக அமைப்பில், நீண்ட காதுடன் இருந்தது. அதன் அருகில் மண்பாண்ட ஓடுகள் கிடந்துள்ளன. இதுகுறித்து உடனடியாக மருக்கலாங்குளம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் பெரியசாமி, ஏஞ்சல் கவுரி பாத்திமா, கிராம உதவியாளர் செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை மீட்டு வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பொறுப்பு மகாலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலை தொல்லியல் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பு சீவலசமுத்திரம் கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்யலாம் என கூறப்படுகிறது.

Related Stories: