×

ஹைட்ராக்ஸி குளோரோகுயின், எச்.ஐ.வி மருந்துகளை கொரோனா நோயாளிகளிடையே பரிசோதிப்பதை நிறுத்துகிறது WHO

ஜெனீவா: கொரோனா தொற்றுக்கான சிகிச்சை முறையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து, லோபினாவிர் / ரிடோனவீர் மருந்துக் கலவை ஆகியவற்றுக்கான சோதனையை உலக சுகாதார நிறுவனம் நிறுத்தியுள்ளது.

HIV தொற்றுக்குப் பயன்படுத்தப்படும் லோபினாவிர் / ரிடோனவீர் மருந்துக் கலவையும் மலேரியா நோய்க்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தும் COVID-19 நோயாளிகளிடம் சோதிக்கப்பட்டன. இருப்பினும் அவை நோயாளிகளின் இறப்பு விகிதத்தை அவ்வளவாகக் குறைக்கவில்லை என்று கூறி, நிறுவனம் அதன் சோதனைகளை நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது. COVID-19-க்கு தொடர்பில்லாத நோய்களின் சிகிச்சை, சோதனைகளுக்கு அவை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் நிறுவனம் கூறியது. உலக சுகாதார நிறுவனம், remdesivir மருந்துக்கான சோதனையைத் தொடர்கிறது.

இதற்கிடையில், உலகளவில் 24 மணி நேரத்தில் மொத்தம் 212,326 புதிய கொரோனா தொற்றுக்கள் பதிவாகி இருப்பதாக WHO தெரிவித்துள்ளது. இதில் 53,200 தொற்றுகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. உலகளவில் மொத்தம் 1,12,32,000 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60,03,000 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,134 இறப்புகள் பதிவாகியுள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது, மொத்த உயிரிழப்பு 523,011 ஆக உள்ளது. மார்ச் 11 அன்று COVID-19 வைரஸ் பரவுதலை ஒரு தொற்றுநோயாக WHO அறிவித்தது.



Tags : testing ,Corona , Corona, Hydroxy Chloroquine, HIV
× RELATED மருந்து சோதனை ஆய்வகத்தில் இளநிலை...