தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

சென்னை: வெப்பச்சனலம் காரணமாக தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய கூடும்.

மேலும், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் உள்ள அம்பன் புயலால் சில இடங்களில் நேற்று மழை பெய்து வந்தது. இதனைத்தொடர்ந்து, சென்னையிலும் நேற்று இரவு மழை பெய்தது. இதனால், சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், நாளை மேற்கு வங்கம், வங்க தேசம் இடையே அம்பன் புயல் கரையைக் கடக்கிறது எனவும் கூறியுள்ளது.

Related Stories: