அமெரிக்காவில் சுதந்திர தினத்திற்கு மத்தியில் நிறவெறிக்கு எதிராக போராட்டம்: அமெரிக்க நாட்டு கொடியை எரித்து பல இடங்களில் மக்கள் ஆவேசம்!!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு நடுவே பல இடங்களில் நிறவெறிக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே திரண்ட ஆயிரக்கணக்கானோர் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். போராட்டக்காரர்கள் அதிகமாக திரண்டதால் வெள்ளை மாளிகையை சுற்றியுள்ள வழிகளை போலீசார் அடைத்துவிட்டனர்.

 அமெரிக்காவில் 224 சுதந்திர தினம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வெள்ளை மாளிகையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி, நியூயார்க்கில் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, மதம், இனம், நிறம் என எந்த வேறுபாடும் கிடையாது. நாம் அனைவரும் அமெரிக்கர்கள். நமது நாட்டை முன்னிலைப்படுத்த நாம் அனைவரும் உறுதியெடுப்போம் என தெரிவித்தார். இந்நிலையில் அதிபர் டிரம்ப் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, அருகில் போராட்டமும் நடைபெற்றதால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

நியூயார்க்கில் டிரம்ப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க கொடிகளை எரித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ் பிளாய்டு நினைவகத்திற்கு பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் டிரம்ப்பிற்கு எதிராகவும், நிறவெறியை கண்டித்தும் முழக்கமிட்டனர். பல இடங்களில் போராட்டக்காரர்களும், டிரம்ப்பின் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டதால் பதற்றமான சூழல் உருவானது.

Related Stories: