முதன்முறையாக ஒரே நாளில் 24,850 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.73 லட்சத்தை தாண்டியது: இதுவரை 19,268 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால்  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,73,165-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,850 பேர் புதிதாக  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 19,268 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 613   உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,09,083 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14,856 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,00,064 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8671 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 1,08,082 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில்  உள்ளது. தமிழகத்தில் 1,07,001 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,450 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ,60,592 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 97,200 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3004 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 68,256 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 10,668 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 6,657 பேர் குணமடைந்தது.

பீகாரில் 11,700 பேருக்கு பாதிப்பு; 89 பேர் பலி; 8,686 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 460 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 395 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 3,161 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 2,549 பேர் குணமடைந்தது.

கோவாவில் 1,684 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 825 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 35,312 பேருக்கு பாதிப்பு; 1,925 பேர் பலி; 25,406 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 16,548 பேருக்கு பாதிப்பு; 260 பேர் பலி; 12,257 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 1,546 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1,202 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 5,204 பேருக்கு பாதிப்பு; 25 பேர் பலி; 3048 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 19,532 பேருக்கு பாதிப்பு; 447 பேர் பலி; 15,640 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 2,739 பேருக்கு பாதிப்பு; 17 பேர் பலி; 2035 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 1005 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 826 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 1,325 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 667 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 62 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 164 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 130 பேர் குணமடைந்தது.

நாகாலாந்தில் 563 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 228 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 8,601 பேருக்கு பாதிப்பு; 34 பேர் பலி; 5,934 பேர் குணமடைந்தது.

பாண்டிச்சேரி 802 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 331 பேர் குணமடைந்தது.

பாஞ்சாப்பில் 6,109 பேருக்கு பாதிப்பு; 162 பேர் பலி; 4,306 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 3093 பேருக்கு பாதிப்பு; 42 பேர் பலி; 2,502 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 21,549 பேருக்கு பாதிப்பு; 335 பேர் பலி; 9244 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 8246 பேருக்கு பாதிப்பு; 127 பேர் பலி; 5143 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 22,312 பேருக்கு பாதிப்பு; 288 பேர் பலி; 11,537 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 21,231 பேருக்கு பாதிப்பு; 736 பேர் பலி; 14,166 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 26,554 பேருக்கு பாதிப்பு; 773 பேர் பலி; 18,154 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 17,699 பேருக்கு பாதிப்பு; 218 பேர் பலி; 8008 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 259 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 76 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 14,604 பேருக்கு பாதிப்பு; 598 பேர் பலி; 11,234 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 1046 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 704 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 119 பேருக்கு பாதிப்பு; 66 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

தாதர் நகர் ஹவேலியில் 271 பேருக்கு பாதிப்பு; 96 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

சிக்கிமில் 103 பேருக்கு பாதிப்பு; 58 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

Related Stories: