×

அதிமுக பிரமுகர் படுகொலை இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் வாயலூர் காலனி கருமாரியம்மன் கோயில் தெரு கிளை செயலாளர் எஸ்.சிலம்பரசன் முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

இந்த படுகொலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெறுவார்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Tags : ABC ,assassination ,AIADMK ,EPS , AIADMK leader's assassination, EPS, opies
× RELATED மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின்...