×

களப்பணியாளரிடம் ஆபாச பேச்சு ஏட்டு பணியிட மாற்றம்

தண்டையார்பேட்டை: சென்னை ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் ஜோசப் (45). இவர், நேற்று காலை கொருக்குப்பேட்டை 6வது தெருவில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது, அங்கு கொரோனா களப்பணியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரை மறித்து நிறுத்திய ஜோசப், அவசர தேவைக்கு தொடர்புகொள்ள உனது செல்போன் எண் வேண்டும், என கூறியுள்ளார். இதனால், அந்த பெண் களப்பணியாளரும், தனது செல்போன் எண்ணை ஜோசப்பிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த பெண் களப்பணியாளரை தொடர்பு கொண்ட ஜோசப், பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதுடன், தனக்கு அடிக்கடி போன் செய்து பேச வேண்டும், என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் களப்பணியாளர், இதுபற்றி தனது மேலதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், அதிகாரிகள் ஆர்கே நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர், தலைமை காவலர் ஜோசப்பிடம் விசாரணை நடத்தினார். அதில், பெண் களப்பணியாளரிடம் அவர் தவறாக பேசியது  தெரியவந்தது. இதையடுத்து, அவர் ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

Tags : Field Manager , Fieldworker, Porn Talk, Record, Workplace Change
× RELATED கை சிதைந்த தூய்மை பணியாளரின் மருத்துவ...