×

விமான பயணிகள் 3 பேருக்கு தொற்று

சென்னை: சென்னை விமான நிலைய உள்ளாட்டு முனையத்தில் கடந்த மே மாதம்  25ம் தேதியிலிருந்து நேற்று வரை 63,584   பயணிகளுக்கு நடத்திய சோதனைகளில் 143  பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சர்வதேச முனையத்தில் கடந்த மே  மாதம் 9ம் தேதியிலிருந்து  நேற்று வரை 11,376  பயணிகளுக்கு சோதனை  நடத்தியதில்  இதுவரை 132  சர்வதேச  பயணிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு முனையத்தில் நேற்று பயணிகள் 3 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில்  இதுவரை 275 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.


Tags : passengers , Air Travelers, Chennai Airport, Corona
× RELATED விமான பயணிகள் 3 பேருக்கு கொரோனா