×

நவம்பர் 30ம் தேதி வரை ஐடி கணக்கு தாக்கல் அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் நடப்பு நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம், நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடக்கப்பட்டு  உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமான வரி செலுத்துவோர், வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு 2019 -20 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த அவகாசம் தற்போது நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான வரி சேமிப்பு முதலீடுகள், கொடுப்பனவுகளுக்கான கால அவகாசத்தை வருமான வரித்துறை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்தது. இதனால், வரி செலுத்துவோர் வருமான வரிச் சட்டத்தின் கீழ் 2019-20 நிதியாண்டில் பெறும் விலக்குகளை ஜூலை 31 வரை முதலீடு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : IT account filing
× RELATED வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு