×

இடுக்கி அருகே ஊரடங்கை மீறி நடிகைகள் உட்பட 300 பேருடன் சுற்றுலா விடுதியில் மது விருந்து

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே புதிதாக திறக்கப்பட்ட சுற்றுலா விடுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி காபரே டான்சுடன் மது விருந்து நடந்தது. இதில் நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் உட்பட 300க்கு மேற்பட்டோர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் சாந்தன்பாறை அருகே உள்ள ராஜாப்பாறையில் ஒரு பிரபல நிறுவனம் சார்பில் சுற்றுலா விடுதி கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த மாதம் 28ம் தேதி நடந்தது. இந்த விழாவில் அப்பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள். போலீஸ் அதிகாரிகள் உட்பட 300க்கு ேமற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். அங்கு காபரே டான்ஸ், பெல்லி நடனம் மற்றும் மது விருந்தும் நடந்துள்ளது. இரவு 8 மணிக்கு தொடங்கிய கேளிக்கை நிகழ்ச்சி நள்ளிரவு 2 மணி வரை நடந்தது.

இந்த நிலையில் இந்த வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஊரடங்கு சட்டப்படி 50 பேருக்கு மேல் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகெள்ளக்கூடாது.  ஆனால் அதை மீறி 300க்கு மேற்பட்டோர் பங்கேற்ற கேளிக்கை விருந்து தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்ைகயும் எடுக்காதது சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசனுக்கு தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி கருப்பசாமிக்கு அவர் உத்தரவிட்டார். விடுதி உரிமையாளர் ராய் குரியன் மீது சாந்தன்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : Idukki ,actresses , dukki, gay curfew, actresses, tourist accommodation, wine party
× RELATED விழுப்புரத்தில் நேற்று முழு...