×

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அர்ராஹ் பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் நேற்று ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடக்கிறது.

Tags : militants ,Kashmir , 2 militants ,shot dead , Kashmir
× RELATED கேரள தங்கம் கடத்தல் பணம் காஷ்மீர்...