அகழாய்வில் அடுத்தடுத்து பிரமிப்பு கீழடியில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் ஆறாம் கட்ட அகழாய்வு தொடங்கி நடந்து வருகிறது. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு நடக்கிறது. கீழடியில் 2ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சி நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட அகழாய்வு குழி ஒன்றில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் வெளிப்பட்டது. இந்த குழி மற்றும் அதனை சுற்றியுள்ள குழிகளில் நேற்று 4 எடை கற்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் செய்யப்பட்டுள்ளன. உருளை வடிவில் உள்ளன. இதன் கீழ் பகுதி தட்டையாக உள்ளது. ஒவ்வொன்றும் முறையே 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ளன. தற்போது கிடைத்துள்ள எடைக்கற்கள் இப்பகுதியில் சிறந்த வணிகம் நடைபெற்றதற்கு சான்றாக உள்ளன என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: