×

நாட்டின் பாதுகாப்பு பணியில் உறுதியான நிலைப்பாடு பிரதமரின் முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லைக்கு சென்ற பிரதமர் மோடி படை  வீரர்களை சந்தித்து  அவர்களது தீர தியாக உணர்வுகளை  பாராட்டியுள்ளார். இச்செயல் நமது ராணுவ வீரர்களுக்கு புதிய உற்சாகத்தையும்,  புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு சிசிச்சை அமைதியை நாடும் தேசம் நம் இந்தியா. ஆனால் அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டால்  தக்க பதிலடியும் தருவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை உலகுக்கு் உணர்த்தியுள்ளார்.

இது தேசத்தின் வலிமையை வெளிப்படுத்தும் வரவேற்புக்குரிய செயல். அதோடு இமயமலை உச்சியில் நின்று கொண்டு திருக்குறளை மேற்கோள்  காட்டி பேசியுள்ளார். இது தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை.  தேசப் பாதுகாப்பு பணியில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு வரும் பிரதமரின்  முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்.

Tags : GK Vasan ,country , The country's security, the prime minister, GK
× RELATED தாயுடன் கள்ளக்காதலால் ஆத்திரம்...