தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்: மத்திய அரசின் நிலையை எதிர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ்வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட  வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள மத்திய அரசு  திட்டமிட்டுள்ள நிலையில், அதை கடுமையாக எதிர்த்து வந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இப்போது எதிர்ப்பைக் கைவிட்டு, ஆதரிக்க  முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அண்மையில் நடைபெற்ற  பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூட்டத்தில், கிரீமிலேயரைக் கணக்கிட  சம்பளமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கான எதிர்ப்பை திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மத்திய அரசின் முடிவு அரசாணையாக வெளியிடப்பட்டு விடும். அவ்வாறு வெளியிடப்பட்டால் மாத வருமானம் 67 ஆயிரத்திற்கும் கூடுதலாக  உள்ள குடும்பங்கள் கிரீமிலேயராக கருதப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும். பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை காப்பது தான்  பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணியாகும். இதை உணர்ந்து ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்க்க வேண்டும் என்ற  மத்திய அரசின் நிலைப்பாட்டைஅது கடுமையாக எதிர்க்க வேண்டும். அதன் மூலம் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதை  உறுதி  செய்ய வேண்டும்.

Related Stories: