×

சென்னை உட்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவிற்கு விமான சேவை ரத்து

புதுடெல்லி: கொரோனா பரவுதல் தடுப்பு நடவடிக்கையாக இரண்டு மாதங்களுக்கு பின் கடந்த மே 25ம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.
நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொல்கத்தாவிற்கு இருந்து 6 நகரங்களில் இருந்து  விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மாநில விமான நிலையம் டிவிட்டர் பதிவில்,“டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை, அகமதாபாத்  உள்ளிட்ட நகரங்களில் இருந்து 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை கொல்கத்தாவிற்கு விமானம் இயக்கப்படாது. சிரமத்திற்கு வருந்துகிறோம்”என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Flights ,Chennai ,cities ,Germany , Chennai, 6 cities, Kolkata, airlines cancel
× RELATED வெளிநாடுகளில் தவித்த 473 இந்தியர்கள் 3 சிறப்பு விமானங்களில் சென்னை வருகை