சில்லி பாயின்ட்…

* தடகள வீரர், வீராங்கனைகளுக்குப் பயிற்சியளிக்கும் இந்திய பயிற்சியாளர்களுக்கான ஊதிய உச்சவரம்பாக ரூ.2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சிறப்பாக செயல்படும் பயிற்சியாளர்களின் நலன் கருதி இந்த உச்சவரம்பு நீக்கப்படுவதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

* தான் டென்னிஸ் விளையாடும் வீடியோவை ட்வீட் செய்துள்ள சச்சின், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரிடம் தனது போர்ஹேண்ட் ஸ்மேஷ் எப்படி என்று கேட்டுள்ளதுடன், ஏதாவது டிப்ஸ் இருந்தால் சொல்லுங்கள் என்றும் பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

* ஆஸ்திரிய கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்துக்கான 2 பயிற்சி போட்டியிலும் மெர்சிடிஸ் அணி நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமிடன் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.

Related Stories: