×

ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஊசி மருந்து செலுத்தி கொரோனா நோயாளிகள் மீட்பு: தேனி அரசு மருத்துவமனை சாதனை

தேனி: தேனியில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மிகவும் சீரியசான நிலையில் இருந்த கொரோனா நோயாளிகள் சிலர் ரூ.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடுப்பூசி போட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர், பெவிபிராவிர் போன்ற மருந்துகளை வழங்க வெளிநாடுகளில் இருந்து ரூ.பல கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இந்த மருந்துகளால் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே இந்த மருந்துகளை கொரோனா தொற்று பாதித்த அனைவருக்கும் தர வேண்டாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் டாக்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் ரூ.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்துகளை அதிகளவில் கொள்முதல் செய்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கும் வழங்கியுள்ளது. தொடர்ந்து இறப்பிற்குள்ளாகும் நோயாளிகளுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை மத்திய, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மிகவும் சீரியசான நிலையில் உள்ள நோயாளிக்கு, குறிப்பிட்ட நேரத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஊசி மருந்தை ஏன் செலுத்தவில்லை என அதிகாரிகள் மருத்துவத்துறையினரிடம் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க வேண்டும்.

அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அனைவருக்கும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஊசி மருந்தை செலுத்துங்கள் என அறிவுரை வழங்கியுள்ளனர். தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெரும் பாதிப்பிற்குள்ளானார். கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கு சென்ற அவரை ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஊசி மருந்தை செலுத்தி டாக்டர்கள் மீட்டனர். இதேபோல் மேலும் பல நோயாளிகளையும் டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையை போல் தேனியிலும் கொரோனா சிகிச்சை தேனியில் கொரோனா தொற்று பாதிப்பு இன்று ஆயிரத்தை கடக்கும் நிலை உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 இடங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானதாகும். மிகவும் சீரியசான நோயாளிகளை மட்டும் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும். மற்ற நோயாளிகளை மதுரையில் நடத்துவது போல் டெலிமெடிசன் சிகிச்சை முறை மூலம் வீடுகளில் வைத்தே கண்காணித்தால் கொரோனா தொற்று சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என டாக்டர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Theni Government Hospital , Injections, Corona Patients, Recovery, Theni Government Hospital, Adventure
× RELATED கொடைக்கானல் ஜிஹெச்சில் எந்த வசதியும் இல்லை: கொரோனா நோயாளிகள் புகார்