×

பன்றிகளால் நோய் பரவும் அபாயம்

வருசநாடு: வருசநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திரியும் பன்றிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது வருசநாடு ஊராட்சி. ஊராட்சிக்குட்பட்ட 17 கூட்டு தெருவில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பன்றிகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. பன்றிகளை அப்புறப்படுத்த கோரி வருசநாடு ஊராட்சி அதிகாரிகளிடம் கிராமமக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர். கிராமமக்கள் நலன் கருதி பொதுஇடங்களில் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Swine, disease, danger
× RELATED பெரியகுப்பம் காவலர் குடியிருப்பில்...