சென்னையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை.: எஸ்.பி. வேலுமணி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை செய்யப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அது சென்னையின் உள்ள அனைத்து மண்டலங்களிலும் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் மருத்துவ குழுக்களை மாநகராட்சி அமைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தமிழகத்திலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை திகழ்ந்து வருகிறது. சென்னையில் கொரோனா வைரசால் இதுவரை 66,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று மட்டும் கொரோன வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,842 பேர் ஆகும்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த  மைக்ரோ திட்டம் , நடமாடும் வாகன மருத்துவ குழுக்கள், சிறப்பு மருத்துவ முகாம்  என பல்வேறு திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள கட்டுமான தளங்களிலும் நடமாடும் மருத்துவ குழுக்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகவும், இக்குழுக்கள் நகரத்தில் உள்ள சுமார் 1.5 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் மீது மட்டும் கவனம் செலுத்தி பரிசோதனை மேற்கோள்ளும்  என்றும்  அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: