×

தருமபுரி அருகே கோழிப்பண்ணையால் நோய் தொற்று அபாயம்: செம்மநத்தம் கிராம மக்கள் ஊரை காலி செய்யும் அவலம்!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செம்மநத்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கோழி பண்ணையால் கிராம மக்கள் ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். செம்மநத்தம் கிராமத்தில் ஊரை ஒட்டி, தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு அளவுக்கு அதிகமாக வெளியேறும் ஈக்கள் அருகில் உள்ள வீடுகளில் புகுவதால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோழி பண்ணையால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்ததாவது, தனியாருக்கு சொந்தமாக இயங்கி வரும் இந்த கோழிப்பண்ணை சுமார் 25 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோழிப்பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஈக்கள், கொசுக்கள் அதிகளவில் பரவுகிறது. அவை வீட்டில் உள்ள அனைத்து பொருட்கள் மீதும் அமர்வதால் குழந்தைகளுக்கு காய்ச்சல், உடல் உபாதைகள் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுகிறது. பலமுறை புகார் அளித்தும் அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

தமிழக அரசு இதனை நினைவில் கொண்டு நல்ல முடிவினை எடுக்க வேண்டும். இன்னும் சில தினங்களில் இந்த கோழி பண்ணை இங்கிருந்து அகற்றப்படாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் எனவும், மேலும், கோழி பண்ணையை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒட்டுமொத்த கிராம மக்களும் ஊரை காலி செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : poultry farming ,Dharmapuri Dharmapuri ,village , Dharmapuri, poultry, disease, infection, risk, sheep, villagers
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...