மால்வேர் , ட்ரோஜன் வைரஸ் இருக்க வாய்ப்பு... சீனா, பாகிஸ்தானில் இருந்து இருந்து மின் சாதனங்களை இயக்குமதி செய்ய வேண்டாம் : மத்திய அரசு

டெல்லி : சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மின் சாதனங்களை இயக்குமதி செய்ய முன் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் உடனான மோதல் சம்பவத்திற்கு பிறகு சீன பொருட்களை இறக்குமதி செய்வதில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சீன நிறுவனங்களுடன் கூட்டாக மேற்கொள்ளப்பட இருந்த பல்வேறு ஒப்பந்தப் புள்ளிகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து மின்சாரப் பொருட்களை இறக்குமதி செய்ய முன் அனுமதி பெற வேண்டும் என்று மின்விநியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த நிலையில், மாநில மின்துறை அமைச்சர்களுடன் காணொளி காட்சி மூலம் நேற்று பேசிய மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், எல்லையில் சீன அத்துமீறி உள்ளதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் இதனால் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மின்விநியோக சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சாரப் பொருட்களில் மால்வேர் அல்லது ட்ரோஜன் வைரஸ் இருக்கலாம் என்றும் இதனால் அவர்கள் எங்கிருந்த படியும் இந்தியா மின் விநியோகத்தை முடக்கும் ஆபத்து ஏற்படலாம் என்றும் எச்சரித்தார். மின்சாதனங்களை இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டாம் என்றும் ஒரு வேளை அவசியம் ஏற்பட்டாலும் அதற்கு மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.கே.சிங் குறிப்பிட்டார்.

Related Stories: