×

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

குல்காம்: காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஆரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பபிதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த என்கவுண்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இந்த சண்டையில்,  பாதுகாப்பு படை வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்நிலையில், அப்பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்க கூடும் என்பதால், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில், அதிக அளவிலான  ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் அம்மாநில போலீசார் கைப்பற்றினர். UBGL கிரினேடுகள், துப்பாக்கிகள் பிஸ்டல்கள், வெடி மருந்துகள் மற்றும் இன்னும் பல ஆயுதங்களும் உதிரி பாகங்களும் ராஜோரியிலிருந்து கைப்பற்றியதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : J-K ,district ,Kashmir ,Gulkam ,Kulgam ,soldiers , Kashmir, Kulgam, Encounter, Terrorist, Security Force
× RELATED ஜம்மு காஷ்மீரின் குல்காம் ...