×

பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டதுபோல் டிக்டாக் செயலி தடையால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்; திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் கருத்து...!!

கொல்கத்தா: டிக்டாக் செயலி தடை விதிக்கப்பட்டதன் மூலம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த வன்முறை நிகழ்ந்ததாக மத்திய அரசு கூறி உள்ளது. இதன் காரணமாக லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனால் சீனா பொருட்களை தவிர்ப்பது, சீன ஆப்களை மொபைலில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் மக்கள் தாங்களாகவே முன்வந்து செய்கின்றனர். இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற டிக் டாக், ஹலோ, ஷேர் இட் உட்பட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு கடந்த மாதம் 29-ம் தேதி அதிரடியாக தடை விதித்தது. இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பம் துறை விடுத்துள்ள அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டை சேர்ந்த சில மொபைல் ஆப்கள், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி முறைகேடு செய்வதாக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுபோன்ற தகவல் திருட்டுகள் தேச  பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திடும்.

எனவே நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, தேச பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கினை கருத்தில் கொண்டு 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2009ன் பிரிவு 69ஏவின் கீழ்,  அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநிலத் திரைப்பட நடிகையும், திரிணாமுல் காங்கிரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான நுஸ்ரத் ஜஹான், டிக்டோக் ஒரு பொழுதுபோக்கு பயன்பாடு. இது மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் முடிவு. இதன் மூலம் எந்த விதமான யுக்திகள் உள்ளன? வேலை இல்லாமல் இருப்பவர்களின் நிலை என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் சந்தித்த பாதிப்பு போன்று இப்போதும் பாதிக்கப்படுவார்கள்.  தேச பாதுகாப்பு என்பதால் டிக்டாக்கை தடை செய்வதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த கேள்விகளுக்கு பதில் யார் கூறுவது’’ என தெரிவித்துள்ளார்.

பின்னர், நுஸ்ரத் ஒரு அறிக்கையை வெளியிட்டார், “டிக்டோக் எனது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இணைவதற்கு வேறு எந்த சமூக ஊடக தளத்தையும் போலவே இருந்தது.  இது தேசிய நலனில் இருந்தால், நான் தடைக்கு முற்றிலும் துணை நிற்கிறேன். ஆனால் சில சீன பயன்பாடுகளைத் தடை செய்வது என்பது மத்திய அரசின் கண் கழுவுதல் மற்றும் ஒரு திடீர் முடிவு. முதல் பக்க விளம்பரங்களில் பி.எம். படத்துடன் வெளிவந்த நிறுவனங்களில் சீன முதலீடுகள் பற்றி என்ன? இராஜதந்திரம் மற்றும் பிரதமரின் வருகைகள் மூலம் என்ன அடையப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இப்போது வீடுகளை நடத்துவதற்கு மாத வருமானத்தை இழக்கும் உள்ளடக்க படைப்பாளர்களைப் பற்றி என்ன? இவை இன்னும் பதிலளிக்கப்படாத கேள்விகள். மேலும், பணவீக்கத்தைச் சேர்க்காமலும், சாமானியர்களின் பைகளில் அழுத்தம் கொடுக்காமலும் சீன விநியோகச் சங்கிலிகளிலிருந்து விலகிச் செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Nusrat Jahan ,Trinamool Congress , People will suffer from the Dictak processor barrier as it was hit by a deflation; Trinamool Congress MP Nusrat Jahan comment ... !!
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...