×

அமெரிக்காவில் பல இடங்களில் கடற்கரையில் மக்கள் கூட்டம்!: கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் திரண்டனர்!!!

வாஷிங்டன்: கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்காவில் கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை மக்கள் குவிந்தனர். மேலும் நியூயார்க் மற்றும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் மக்கள் அதிகளவில் திரண்டு குளித்து மகிழ்ச்சி அடைந்தனர். நியூயார்க் நகரின் கடற்கரையில், நூற்றுக்கணக்கான மக்கள் குடும்பத்தினருடன் திரண்டனர். கடல்நீரில் நீராடியும், மணலில் இளைப்பாரியும், மாலை நேரத்தை கழித்தனர். ஒரே நேரத்தில் வாகனங்கள் வரத்து அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் ஆரஞ்ச் கவுன்டரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை வர தடையுள்ளதால் வெள்ளி அன்று மாலை ஏராளமானவர்கள் குடும்பத்துடன் திரண்டு பொழுதை கழித்தனர். தொடர்ந்து, கூட்டம் கூடுவதை தடுக்க கலிபோர்னியா கடற்கரையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பல்வேறு நாடுகளை சேர்ந்த 529,064 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 11,189,388 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,297,202 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 58,836 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை துளியும் பொருட்படுத்தாமல் அமெரிக்க மக்கள் கடற்கரையில் குவிந்து வருவது மேலும் தொற்று பரவ வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது.

Tags : Beach crowds ,places ,US ,Coronavirus In Beach Masses , Beach masses in many places in the US !: Amid the threat of coronavirus infection
× RELATED பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை