×

சீனாவுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்

நியூயார்க்: லடாக் எல்லையில் அத்துமீறும் சீனாவை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லைப் பிரச்னை என்பது ஆண்டுகள் கடந்து தொடர் கதையாகிவருகிறது. என்றாலும், கடந்த மாதம் 15-ம் தேதி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் கடும் மோதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தியத் தரப்பில் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகள் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனாவை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்நாட்டில் வாழும் தைவான் மற்றும் திபெத் நாட்டை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்துவதாகவும், தங்கள் பலத்தை காட்டி அணைத்து நாடுகளையும் மிரட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீனா மீது குற்றம் சாட்டியுள்ளனர். போராட்டத்தின்போது சீனா உலகை அச்சுறுத்தும் புற்றுநோய் என்று தெரிவித்த அவர்கள், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் விவாகரத்தில் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் தென் சீன கடல் விவகாரம், இந்திய உடனான லடாக் எல்லை பிரச்னை உள்ளிட்டவைகள், சீனாவுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்துள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Chinese , சீனாவுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்
× RELATED மதுரையில் தனியார் உணவகம் சார்பில் சீன...