×

மே மாதம் நிகழ்ந்த என்எல்சி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் இதே நிதியுதவி வழங்க வேண்டும்: ராமதாஸ் டிவிட்டரில் பதிவு

சென்னை: கடந்த மே 7ம் தேதி நிகழ்ந்த என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இதே நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் கூறியுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் கூறியிருப்பதாவது: என்.எல்.சி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த மே 7ம் தேதி நிகழ்ந்த என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இதே நிதியுதவி வழங்கப்பட வேண்டும். என்.எல்.சி விபத்தில் இப்போது உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் இழப்பீட்டு தொகையான ரூ.30 லட்சம் மே மாத விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் பொருந்தும் என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல், தமிழக அரசின் உதவியும் முந்தைய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.  


Tags : families ,victims ,accident ,NLC ,Ramadas ,NLC Accident , May, NLC accident, family of survivors, same fund, Ramadas
× RELATED ஊரடங்கால் வறுமையில் சிக்கிய சுற்றுலா...