×

நடிகர் விஷாலின் னிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி: பெண் ஊழியருக்கு போலீஸ் வலை

சென்னை: நடிகர் விஷால் நடத்தி வரும் சினிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக உள்ள கணக்கு வழக்குகளை கவனித்து வந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷால். இவர் திமிரு, இரும்புத்திரை, ஆம்பள, பாயும்புலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றும்  நடத்தி வருகிறார். இவரது அலுவலகம் வடபழனி, குமரன் காலனியில் இயங்கிவருகிறது. இவர் பல்வேறு சினிமா படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இவரது மேலாளர் ஹரி என்பவர் வடபழனி போலீஸ் உதவி கமிஷனர் ஆரோக்கியம் பிரகாசத்திடம் புகார் மனு அளித்தார். அதில், நடிகர் விஷால் சினிமா தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் அண்மையில் கணக்குகள் பார்க்கப்பட்டதாகவும் அப்போது ரூ.45 லட்சம் வரை குறைவதாகவும் தெரிவித்துள்ளனர். எங்களுக்கு கணக்கு வழக்குகளை கவனித்து வந்த பெண் மற்றும் ஊழியர்கள் மீது சந்தேகம் உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்படி உதவி கமிஷனர் விசாரணை நடத்த விருகம்பாக்கம் போலீசாருக்கு  உத்தரவிட்டார். அதை தொடர்ந்து விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் புகாரின் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கணக்கு வழக்குகளை கவனித்து வந்த பெண் மாயமாகி உள்ளதாகவும் அவரை செல்போன் சிக்னல் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடியில் சினிமா தயாரிப்பு அலுவலகத்தில் பணியாற்றி வந்த சக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Vishal ,Production Office , Actor Vishal Nima, Production Office, Rs 45 Lakhs, Fraud, Female Employee, Police Net
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஷால் குணமடைந்தார்