×

சொல்லிட்டாங்க...

* தமிழகத்தில் ‘சமூக பரவல் இல்லை’ என அமைச்சரும், முதலமைச்சருமே மருத்துவ விஞ்ஞானிகள்போல மாறிமாறி பேட்டியளித்து- நோய் தடுப்பு காலத்தை வீணடிக்கிறார்கள். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* 151 ரயில்கள் தனியார்மயமாக்கப்படுவது ரயில்வே துறையின் வளர்ச்சிக்கோ, மக்களின் முன்னேற்றத்திற்கோ வழிவகுக்காது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* ரயில்களை தனியார் இயக்க அனுமதி வழங்கப்படும் என்ற வாரிய அறிவிப்பு நாட்டின் பொருளாதார சுயசார்பை தகர்த்து விடும் அபாயகரமான செயல். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* நெடுஞ்சாலைத்துறையில் அவசிய பணி தவிர இதர பணிகளுக்கான டெண்டர்களை நிறுத்தி, அந்த நிதியை கொரோனா மருத்துவ, நிவாரணப் பணிகளுக்கு செலவழிக்க வேண்டும். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...