×

மாநில தலைவர் எல்.முருகன் அதிரடி நடவடிக்கை தமிழக பாஜ நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: பொருளாளர்- எஸ்.ஆர்.சேகர், இளைஞர் அணி- வினோஜ் பி.செல்வம், வழக்கறிஞர் அணி- பால்கனகராஜ்

சென்னை: தமிழக பாஜ நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி மாநில தலைவர் எல்.முருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பொருளாளராக எஸ்.ஆர்.சேகர், இளைஞர் அணி தலைவராக வினோஜ் பி.செல்வம், வழக்கறிஞர் அணி தலைவராக பால்கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக பாஜவின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தராஜன் கடந்த ஆண்டு  செப்டம்பர் 1ம் தேதி தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக பாஜ புதிய தலைவராக எல்.முருகன் கடந்த மார்ச் 11ம் தேதி நியமிக்கப்பட்டார். தற்போது அவர் பாஜ நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக பாஜ புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில துணை தலைவர்களாக எம்.சக்ரவர்த்தி, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, கே.எஸ்.நரேந்திரன், வானதி சீனிவாசன், திருவாரூர் எம்.முருகானந்தம், எம்.என்.ராஜா, ஏ.ஆர்.மகாலட்சுமி, பேராசிரியர் கனக சபாபதி, புரட்சிக்கவிதாசன். பொது செயலாளர்கள்- கே.டி.ராகவன், ஜி.கே.செல்வகுமார், பேராசிரியர் ஆர்.சீனிவாசன், கரு நாகராஜன்.
மாநில செயலாளர்கள்- சண்முகராஜ், டால்பின் ஸ்ரீதர், டி.வரதராஜன், முன்னாள் எம்எல்ஏ ஏ.பாஸ்கர், ஆர்.உமாரதி, டி.மலர்கொடி, முன்னாள் மேயர் பி.கார்த்தியாயினி, பார்வதி நடராஜன், சுமதி வெங்கடேஷ், பொருளாளர்- எஸ்.ஆர்.சேகர். இணை பொருளாளர் சிவ.சுப்பிரமணியன், மாநில அலுவலக செயலாளர் எம்.சந்திரன். மாநில இளைஞர் அணி தலைவராக வினோஜ் பி.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் அணி தலைவர்-எஸ்.மீனாட்சி, எஸ்.சி.அணி தலைவர்- பொன்.வி.பாலகணபதி, எஸ்.டி.அணி எஸ்.சிவப்பிரகாசம், விவசாய அணி ஜி.கே.நாகராஜ், ஓபிசி அணி ஜெ.லோகநாதன், சிறுபான்மையினர் அணி ஏ.ஆஷிம் பாஷா. மீனவர் பிரிவு-எஸ்.சதீஸ்குமார், நெசவாளர் பிரிவு- கே.எஸ்.பாலமுருகன், வர்த்தகர் பிரிவு- ஏ.என்.ராஜ கண்ணன். கலை, பிரசார பிரிவு- காயத்ரி ரகுராம், அறிவு ஜீவிகள் பிரிவு- ஆர்.ஏ.அர்ஜூன மூர்த்தி, கல்வியாளர் பிரிவு-தங்க கணேசன், வழக்கறிஞர் பிரிவு- ஆர்.சி.பால் கனகராஜ், பொருளாதார பிரிவு- ஜி.பாஸ்கர், முன்னாள் ராணுவ பிரிவு- கர்னல் பாண்டியன், அரசு தொடர்பு பிரிவு- எம்.பாஸ்கரன், தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடக பிரிவு- சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஊடக தொடர்பு பிரிவு- ஏ.என்.எஸ்.பிரசாத், எம்.கே.ரவிச்சந்திரன், எஸ்.என்.பாலாஜி. அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு- சி.பாண்டிதுரை, பிரசாரம் மற்றும் வெளியீட்டு பிரிவு- குமரி கிருஷ்ணன், பிறமொழி பிரிவு- சித்தார்த், தமிழ் வளர்ச்சி பிரிவு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் பிரிவு ஆதித்யா என்ற எம்கோகுல கிருஷ்ணன், மருத்துவ பிரிவு- டாக்டர் விஜய் பாண்டியன் ஆகியோர் பிரிவு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில விருந்தோம்பல் பிரிவு ராத்மா சங்கர் (தென்சென்னை), கே.பி.ஜெயக்குமார் (செங்கல்பட்டு) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக டாக்டர் சிவகாமி பரமசிவம் (திருவள்ளூர்), ராத்மா சங்கர் (வடசென்னை), வி.காளிதாஸ் (தென் சென்னை), மாதவரம் எம்.மனோகரன் (மத்திய சென்னை), சர்வோத்தமன் (ஸ்ரீபெரும்புதூர்), தடா பெரியாசமி (காஞ்சிபுரம்) உள்ளிட்ட 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பார்வையாளர்களாக செம்பாக்கம் ஏ.வேத சுப்பிரமணியம் (செங்கல்பட்டு மாவட்டம்), பி.ஜி.மோகனராஜா (காஞ்சிபுரம்), எஸ்.மோகன்ராஜூலு (திருவள்ளூர் கிழக்கு), ஏ.என்.எஸ்.பிரசாத் (திருவள்ளூர் மேற்கு), எம்.என்.ராஜா (தென்சென்னை), கே.பி.ஜெயகுமார் (சென்னை கிழக்கு), கே.தனஞ்ஜெயன் (சென்னை மேற்கு), வி.காளிதாஸ் (மத்திய சென்னை கிழக்கு), அனு சந்திரமவுலி (மத்திய சென்னை மேற்கு), வி.எஸ்.ஜெ.சீனிவாசன் (வடசென்னை கிழக்கு), வி.கோபி கிருஷ்ணன் (வடசென்னை மேற்கு) என 60 மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடிகை நமீதா, கவுதமிக்கு பதவி: மாநில செயற்குழு உறுப்பினர்களாக எம்.எஸ்.ஜெயின் (செங்கல்பட்டு), சிவ செந்தமிழரசு (செங்கல்பட்டு), சி.ரவீந்திரன் (காஞ்சிபுரம்), டாக்டர் லட்சுமி பாலாஜி (திருவள்ளூர் கிழக்கு), சி.எஸ்.சி.வடிவேலு (தென்சென்னை), வழக்கறிஞர்  ஆர்.சவுந்தரராஜன் (தென்சென்னை), பரமசிவம் (தென்சென்னை), டாக்டர் முருகமணி (தென்சென்னை), லட்சுமி சுரேஷ் (தென்சென்னை), மதுவந்தி (தென்சென்னை), நடிகை கவுதமி (கிழக்கு சென்னை), மாதவி மபொசி (கிழக்கு சென்னை), வி.எல்.நரசிம்மன் (சென்னை கிழக்கு), எம்.ஜெயலட்சுமி (மேற்கு சென்னை), கே.ராஜசிம்மன் (மத்திய சென்னை கிழக்கு),

சுஜாதா ராவ் (மத்திய சென்னை கிழக்கு), குட்டி பத்மினி (மத்திய சென்னை கிழக்கு) நடிகை நமீதா (மத்திய சென்னை கிழக்கு), சௌதாமணி (மத்திய சென்னை கிழக்கு), முன்னாள் போலீஸ் டிஜிபி பாலச்சந்தர் (மத்திய சென்னை மேற்கு), வழக்கறிஞர் கே.கனிமொழி (மத்திய சென்னை மேற்கு), அகிலா சம்பத் (மத்திய சென்னை மேற்கு), பி.அசோக் (மத்திய சென்னை மேற்கு), ராஜலட்சுமி மந்தா (மத்திய சென்னை மேற்கு), வெங்கட்ராவ் (வடக்கு சென்னை கிழக்கு), வி.கோபிகிருஷ்ணன் (வடக்கு சென்னை மேற்கு), ஆர்.பிரகாஷ் (வடக்கு சென்னை மேற்கு), முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிதம்பரசாமி (திருப்பூர் வடக்கு), தாஸ்பாண்டியன் (சென்னை) உள்பட 78 மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, மாநில செய்தி தொடர்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tags : State President ,BJP Executives Transition: Treasurer - SR Sekhar, Youth Team ,L Murugan Action Action ,Tamil Nadu ,Advocate Team ,P. Selvam ,Balkanagaraj ,Executives ,BJP ,Treasurer - SR Sekhar, Youth Team , State President L. Murugan, Tamil Nadu BJP Executives, Transitioner, Treasurer - SR Sekhar, Youth Team - Vinoj P. Selvam, Advocate Team - Balkanagaraj
× RELATED சிங்கம்பட்டி மன்னர் முருகதாஸ்...