×

ரூ.5.80 கோடியில் கட்டப்பட்ட வாய்க்கால் தடுப்பு சுவர் 15 நாளில் உடைந்தது

தரங்கம்பாடி: ரூ.5.80 கோடி செலவில் கட்டப்பட்ட வாய்க்கால் கரை தடுப்பு சுவர் 15 நாளில் உடைந்து சேதமானது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரும்பாக்கத்தில் வீரசோழன் ஆற்றில் இருந்து சேர்ந்தவராயன் வாய்க்கால், குரும்பக்குடி வாய்க்கால் என இரண்டு பாசன வாய்க்கால் செல்லுகின்றன. அந்த வாய்க்கால்களில் கரையை பலப்படுத்தும் வகையில் ரூ.5.80 கோடி செலவில் தடுப்பு சுவர் அமைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அந்த பணியை செய்ய சேலத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்து வேலை செய்தது. கடந்த ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் அவசர அவசமாக வேலை செய்து முடிக்கப்பட்டது. வீரசோழன் ஆற்றுக்கு வந்த தண்ணீர் வாய்க்காலில் சென்ற போது, தடுப்பு சுவர் கரைந்து உடைந்து சேதமானது. இதைகண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். துரித நடவடிக்கை எடுத்து இந்த பணியை முழுமையாக தரமாக செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்தனர்.

Tags : Rs.5.80 crores, drainage wall, broke in 15 days
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி