×

ஊரடங்கை மீறியதாக தமிழகத்தில் 102 நாட்களில் 7.90 லட்சம் பேர் கைது

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 102  நாட்களில் 7.90 லட்சம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதமாக ரூ.16.79 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேநேரம் கொரோனா தாக்கம் குறைந்த மாவட்டங்களில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தி பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியது. ஆனாலும், இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 1ம் தேதி முதல் மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டடங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நோய் தொற்று காரணமாக பல மாவட்டங்களில் ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் கடந்த 102 நாட்களில் 6 லட்சத்து 3 ஆயிரத்து 219 வழக்குகள் பதிவு செய்து 7 லட்சத்து 90 ஆயிரத்து 640 பேரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 3 ஆயிரத்து 219 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக 16 கோடியே 79 லட்சத்து 12 ஆயிரத்து 905 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu, 102 days, 7.90 lakh people arrested for violating curfew
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...