×

24 மணி நேரத்தில் 20,903 பேர் பாதிப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக 24 மணி நேரத்தில் 20,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதே நேரத்தில் பரிசோதனை செய்தல், நோய் பாதித்தவரை கண்டறிதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெள்ளியன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 20,903 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

நாடு முழுவதும் 3,79,891 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 2,27,439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களில் 60.73 சதவீதம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 379 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 125 பேர் இறந்துள்ளனர். டெல்லி 61, தமிழ்நாடு 57, குஜராத் மற்றும் கர்நாடகா தலா 19, உத்தரப்பிரதேசம் 17, மேற்கு வங்கம் 16, அரியானா 11, ஜம்மு காஷ்மீர் 10, ராஜஸ்தான் 9, தெலங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம் தலா 8, பீகார் 7, ஆந்திரா 5, பஞ்சாப் 3, புதுச்சேரி 2, கேரளா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒரு கொரோனா உயிரிழப்பும் பதிவாகி உள்ளது.

Tags : 24 hours, 20,903 people, vulnerable
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...