×

மாநிலங்களுக்கு 3 மாதத்தில் 2 கோடி முகக் கவசம் 6 கோடி மாத்திரைகள்: மத்திய அரசு தாராளம்

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பரவிய பிறகு, கடந்த 3 மாதங்களில் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்கள், மருந்துகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விவரம் வருமாறு:
* கடந்த ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 2.02 கோடிக்கும் அதிகமான என்-95 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
* ‘பிபிஇ கிட்’ எனப்படும் முழு பாதுகாப்பு கவச உடைகள் 1.18 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே 6,154 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டு விட்டது.
* நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1.02 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
* ஹைட்ரோக்சிக் குளோரோ குயின் மாத்திரைகள் 6.12 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Tags : government ,states , 3 months to the states, 2 crores of face shield, 6 crores pills, central government, generosity
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்