×

சீன பொருட்களுக்கு மறைமுகமாக தடை விதித்து வரும் இந்தியா: இந்நிலை நீடித்தால் ஜவுளித் துறை மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தகவல்..!!

டெல்லி: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீடிக்கும் எல்லைப் பிரச்சினையால் சீன பொருட்கள் மீது இந்தியா மறைமுகமாக தடை விதித்துள்ளது. ஏற்கெனவே Tik Tok, Helo, UC Browser உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இந்திய துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேக்கத்தால் இந்திய தொழில் நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, இந்த நிலை நீடித்தால் ஜவுளித் துறை மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் துறைக்கு தேவையான இயந்திரங்கள், பட்டன்கள், தையல் இயந்திரங்கள், உலோக பொருட்கள், உதிரி பாகங்கள் அதிகளவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஜவுளித் துறை மையமான திருப்பூர் தனது தேவைகளுக்காக 90% சீனாவைச் சார்ந்தே இருக்கிறது. மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் ஏராளமானவை துறைமுகங்களில் தேங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உரிய நேரத்திற்குள், குறைந்த செலவில் மற்ற நாடுகளில் சரக்குகளை பெறாவிட்டால் ஜவுளித் துறை மிக மோசமான ஆபத்தை எதிர்கொள்ளும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஜவுளித் துறைக்கு தேவையான சில பொருட்கள் மற்ற நாடுகளில் கிடைத்தாலும், பல பொருட்கள் சீனாவில் மட்டுமே கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜவுளிப் பொருட்களை துருக்கி, வியட்நாம், தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளில் இருந்து வாங்கிவிடலாம். ஆனால் இயந்திர உதிரி பாகங்களை சீனாவிடமிருந்து மட்டுமே வாங்க முடியும். பொருட்களின் விலையும் மற்றொரு பிரச்சினையாக இருக்கிறது. சீன பொருட்களின் விலை மிகக்குறைவாக இருக்கிறது. ஆடை உற்பத்தியாளர்கள் ஆடை பசைகளுக்கு சீனாவை நம்பியே இருக்கின்றனர். ஆகவே, இந்தப் பிரச்சினையில் அரசு விரைவில் தீர்வு காண வேண்டுமென்பதே ஜவுளித் துறையினரின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags : India ,Chinese , Chinese goods, ban, India
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...