மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன்...ஆனால் சீனா'என்ற பெயரை குறிப்பிட ஏன் இந்தத் தயக்கம்?: ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் கேள்வி..!!

டெல்லி: சீனா என்ற பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நடந்து முடிந்த முதலமைச்சர்கள் கூட்டத்தின் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லை என்றும், மேலும் இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா? என தெரிவித்துள்ளார். மேலும் இதனையடுத்து.....இந்திய நிலப்பகுதிபெயரை யில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன்.

ஏன் இந்தத் தயக்கம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே மோதலுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா என்ற பெயரை குறிப்பிடாமல் அனைத்து உரையிலும் எச்சரித்து வந்தார். இந்த நிலையில் இன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக்கின் லே எனும் பகுதியில் அமைந்துள்ள நிமு முகாமில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். சீனாவுடன் மோதல் நடந்த லடாக் பகுதியில் திடீர் ஆய்வு செய்த பிரதமர்,  கடல் மட்டத்தில் இருந்து 11ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். இதனையடுத்து இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் சீனா என்ற பெயரை பிரதமர் மோடி குறிப்பிடாததன் மர்மம் என்ன? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: